2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சாதனை படைத்த மன் /புனித சவேரியார் சாதனையாளர் கௌரவிப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். றொசேரியன் லெம்பேட்

வட மாகாண ரீதியாக இடம்பெற்ற பாடசாலை ரீதியான விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது, பாடசாலை
அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று
முன்தினம் இடம்பெற்றது.

இவ்விளையாட்டு நிகழ்வில் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 80 புள்ளிகளைப் பெற்று ஆண்கள்
பிரிவில் மன்னார் வலயத்தில் முதலாமிடத்தையும், மாகாண ரீதியாக இரண்டாமிடத்தைப் பெற்று
மன்னார் வலயம் மாகாண ரீதியாக முதல் நிலையை பெற்றுக் கொள்ள வழிவகுத்திருந்தது.
இந்த நிலையில் குறித்த மாகாண போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்
நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் மன்னார் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஞானராஜ்
பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.

குறித்த மாகாண விளையாட்டு போட்டிகளில் புனித சவேரியார் கல்லூரி மூன்று தங்கப்
பதக்கங்களையும், மூன்று வெள்ளி பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும், ஆறு நான்காமிடங்கள் மற்றும் இரண்டு ஐந்தாமிடங்களைப் பெற்று கொண்டது. 

மேலும், குறித்த போட்டிகளில், 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலோட்ட
போட்டியில் புனித சவேரியார் கல்லூரி மாணவர் புதிய மாகாண சாதனையை நிலை
நாட்டியதோடு ,14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் மாணவன்
ப்ரோமியன் மாகாண சாதனையை சமன் செய்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X