2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சாமரி அத்தப்பத்து 44 ஓட்டங்களைப் பெற்றபோதும் தோற்ற சுப்பர்நோவாஸ்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 04 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவி சாமரி அத்தப்பத்து 44 (39) ஓட்டங்களைப் பெற்றபோதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற பெண்களின் இருபதுக்கு – 20 சவால் கண்காட்சித் தொடரின் முதலாவது போட்டியில் அவரது சுப்பர்நோவாஸ் அணி வெலோசிற்றி அணிக்கெதிரான போட்டியில் தோற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கையணியின் முன்னாள் தலைவி ஷஷிகலா சிரிவர்தனவையும் உள்ளடக்கிய சுப்பர்நோவாஸ் சாமரி அத்தப்பத்து தவிர அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர் மாத்திரமே குறிப்பிடத்தக்கதாக 31(27) ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஏக்தா பிஷ்ட் (3), லெய் கஸ்பரெக் (2), ஜன்ஹனர அலாம் (2), ஷிகா பாண்டே கட்டுக்கோப்பாக பந்துவீசிய நிலையில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 127 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வெலோசிற்றி, அயபொங்கா காகா, பூனம் யாதவ், ராதா யாதவ்விடம் விக்கெட்டுகளை இழந்தபோதும், சுனே லுஸ்ஸின் ஆட்டமிழக்காத 37 (21), சுஷ்மா வர்மாவின் 34 (33), வேதா கிருஷ்ணமூர்த்தியின் 29 (28) ஓட்டங்களோடு, 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .