Shanmugan Murugavel / 2025 ஜூன் 29 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதலாம் நாள் முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 418 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், புலவாயோவில் சனிக்கிழமை (28) ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் கேஷவ் மஹராஜ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். தென்னாபிரிக்கா சார்பாக வேகப்பந்துவீச்சாளர் கோடி யூசுஃப், துடுப்பாட்டவீரர் லுஹான்-ட்ரீ பிறிட்டோறியஸ் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், டெவால்ட் பிறெவிஸ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார்.
தனக சிவங்காவிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் பிறிட்டோறியஸின் 153, பிறெவிஸின் 51, கோர்பின் போஷின் ஆட்டமிழக்காத 100 ஓட்டங்களோடே குறித்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது. களத்தில் மறுமுனையில் கவெனா மபஹா ஒன்பது ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். பந்துவீச்சில் சிவங்கா 4, பிளஸிங்க் முஸர்பனி 2, வின்சென்ட் மஸெகெஸா மற்றும் வெலிங்டன் மஸகட்ஸா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
9 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago