Shanmugan Murugavel / 2025 ஜூலை 06 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் தென்னாபிரிக்கா காணப்படுகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்ற நிலையில், புலவாயோவில் ஞாயிற்றுக்கிழமை (06) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, பதிலணித்தலைவர் வியான் முல்டரின் ஆட்டமிழக்காத 264, டேவிட் பெடிங்ஹாமின் 82, லுஹான்-ட்றீ பிறிட்டோறியஸின் 78 ஓட்டங்களோடு முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 465 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் முல்டருடன் டெவால்ட் பிறெவிஸ் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் தனக சிவங்கா 2, குன்டாய் மடிஜிமு, வெலிங்டன் மஸகட்ஸா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
40 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
59 minute ago
2 hours ago