2025 ஜூலை 09, புதன்கிழமை

சிம்பாப்வேக்கெதிரான 2ஆவது டெஸ்டை வென்று தொடரைச் சமப்படுத்தியது பங்களாதேஷ்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் 1-1 என சமநிலையாகியுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் சிம்பாப்வே வெற்றி பெற்றிருந்த நிலையில், டாக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டில் பங்களாதேஷ் வென்றமையைத் தொடர்ந்தே தொடர் 1-1 என சமநிலையாகியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 522/7 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 219, மொமினுல் ஹக் 161, மெஹெடி ஹசன் மிராஸ் ஆ.இ 68 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜார்விஸ் 5/71)

சிம்பாப்வே: 304/10 (துடுப்பாட்டம்: பிரெண்டன் டெய்லர் 110, பீற்றர் மூர் 83, பிரயான் சாரி 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 5/107, மெஹெடி ஹசன் மிராஸ் 3/61)

பங்களாதேஷ்: 224/6 (துடுப்பாட்டம்: மகதுல்லா ஆ.இ 101, மொஹமட் மிதுன் 67 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜார்விஸ் 2/27, டொனால்ட் ட்ரிபானோ 2/31)

சிம்பாப்வே: 224/10 (துடுப்பாட்டம்: பிரெண்டன் டெய்லர் ஆ.இ 106, பிரயான் சாரி 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹெடி ஹசன் மிராஸ் 5/38, தஜியுல் இஸ்லாம் 2/93)

போட்டியின் நாயகன்: முஷ்பிக்கூர் ரஹீம்

தொடரின் நாயகன்: தஜியுல் இஸ்லாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .