2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

‘சிராஜ் மீது பந்து எறியப்பட்டது’

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் மீது சனத்திரளிலிருந்து பந்தொன்று எறியப்பட்டதாக றிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதனாலேயே இந்திய அணித்தலைவர் விராட் கோலி கோபமடைந்துள்ளார்.

இந்நிலையில், எவ்வகையான பந்து எறியப்பட்டது என்றோ அல்லது அது வேண்டும் என்று சிராஜ்ஜைத் தாக்குவதற்காக இலக்கு வைக்கப்பட்டதா எனத் தெளிவில்லாமலுள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்து உத்தியோகபூர்வமாக இந்தியா முறைப்பாடு எதையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் நேற்று ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் நேற்றைய முதல் நாளிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X