2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறந்த வீரராக மெஸ்ஸி, வீராங்கனையாக பிறேஸர்-பிறைஸ்

Shanmugan Murugavel   / 2023 மே 09 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக லியனல் மெஸ்ஸி பெயரிடப்பட்டுள்ள நிலையில், சிறந்த வீராங்கனையாக குறுந்தூர ஓட்ட சம்பியனான ஷெலி-அன் பிறேஸர்-பிறைஸ் தெரிவாகியுள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸி, கடந்த 2020ஆம் ஆண்டு இவ்விருதை போர்மியுலா வண் ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனுடன் பகர்ந்திருந்தார்.

ஜமைக்காவின் பிறேஸர்-பிறைஸ், உலகத் தடகள சம்பியன்ஷிப்பில் 100 மீற்றரில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இதேவேளை, ஆண்டின் உலக அணியாக மெஸ்ஸி தலைவராகவுள்ள ஆர்ஜென்டீன ஆண்களின் கால்பந்தாட்ட அணி பெயரிடப்பட்டுள்ளது. அந்தவகையில், இவ்விரண்டு விருதுகளையும் வெல்லும் முதலாவது தடகளவீரராக மெஸ்ஸி மாறியுள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்று தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ஸ்பெய்னின் கார்லோஸ் அல்கரஸ், ஆண்டின் உலகத் திருப்புமுனையாக பெயரிடப்பட்டார்.

இதேவேளை, யூரோ சம்பியன்ஷிப் 2021ஆம் ஆண்டில் ஏற்பட்ட மாரடைப்பிலிருந்து குணமடைந்து இங்கிலாந்து பிறீமியர் லீக்குக்குத் திரும்பி டென்மார்க்குடன் உலகக் கிண்ணத்தில் போட்டியிட்ட கிறிஸ்டியன் எரிக்ஸன், ஆண்டின் உலக மீள்வருகை விருதைப் பெற்றுக் கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .