Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 10 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றின் முடிவில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி முன்னிலை பெற்றுள்ளது.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் வெம்ப்ளி மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற செல்சியுடனான அரையிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முன்னிலை பெற்றது.
இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் நட்சத்திர முன்கள வீரர் ஹரி கேன், செல்சியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலாகாவால் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் உதவியுடன் மத்தியஸ்தரால் வழங்கப்பட்ட பெனால்டியை கேன் கோலாக்கிய நிலையிலேயே இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது.
மிகவும் கடுமையாக இடம்பெற்ற இப்போட்டியின் முதற்பாதியில், செல்சியின் என்கலோ கன்டேயின் உதை கோல் கம்பத்தில் பட்டுத்து திரும்பியிருந்ததுடன், செல்சியின் முன்கள வீரரான கலும் ஹட்சன் ஒடோயின் உதையை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் கோல் காப்பாளர் போலோ கஸனிகா கோல் கம்பத்தை நோக்கி தட்டி விட்டிருந்தார்.
பின்னர், செல்சியின் அன்ட்ரியாஸ் கிறிஸ்டியன்சன், கோல் கம்பத்திலிருந்து ஆறு அடி தூரத்திலிருந்து கோ பெறும் வாய்ப்பொன்றை தவறவிட்டிருந்ததுடன், கேனிடமிருந்தான உதையொன்றை அரிஸபலாகா தடுத்திருந்தார்.
இந்நிலையில், இரண்டு அணிகளுக்குமிடையிலான அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டி, செல்சியின் ஸ்டம்போர்ட் பிறிட்ஜ் மைதானத்தில் இம்மாதம் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago