2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

செல்சியை வீழ்த்தியது ஆர்சனல்

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற செல்சியுடனான போட்டியில் ஆர்சனல் வென்றது.

இப்போட்டியில், 14ஆவது நிமிடத்தில் ஹெக்டர் பெல்லரினிடமிருந்து பெற்ற பந்தை அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே கோலாக்க, ஆர்சனல் முன்னிலை பெற்றது. பின்னர் 39ஆவது நிமிடத்தில் ஆர்சனலின் அணித்தலைவரும் மத்தியபின்கள வீரருமான லோரன்ட் கொஷியென்ஸ்கி பெற்ற கோலுடன் தமது முன்னிலையை ஆர்சனல் இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இரண்டாவது பாதியில் மேம்பட்டதாக செல்சி விளையாடியபோதும் லோரன்ட் கொஷியென்ஸ்கியின் தலைமையில் கட்டமைக்கப்பட்டிருந்த பின்களத்தை செல்சியால் முறியடிக்க முடியாத நிலையில், போட்டியின் 64 சதவீதமான நேரம் பந்தை தாமே கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் இறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் நேற்று இடம்பெற்ற ஏனைய பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

லிவர்பூலின் மைதானத்தில்,

லிவர்பூல் 4 – 3 கிறிஸ்டல் பலஸ்

முதற்பாதி முடிவில் 0-1

மொஹமட் சாலா 46, 75   அன்றூஸ் டெளன்ட்சென்ட் 34

றொபேர்ட்ட் பெர்மினோ 53  ஜேம்ஸ் டொம்கின்ஸ் 65

சாடியோ மனே 90+3   மக்ஸ் மேயர் 90+5

 

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில்,

மன்செஸ்டர் யுனைட்டெட் 2 – 1 பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன்

முதற்பாதி முடிவில்  2-0    பஸ்கால் க்றொப்

போல் பொக்பா 27 (பெ)

மார்க்கஸ் றஷ்போர்ட் 42

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .