Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான செல்சியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது.
இப்போட்டியின் 30ஆவது நிமிடத்தில் சக செல்சி வீரர் விக்டர் மோஸஸிடமிருந்து பெற்ற பந்தை அல்வரோ மொராட்டா கோலாக்க செல்சி முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், முதற்பாதி முடிவடையும் தருணத்தில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் கிறிஸ்டியான் எரிக்சன் கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்து பெற்ற அருமையான கோல் காரணமாக கோல் எண்ணிக்கையை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமன் செய்தது.
தொடர்ந்த இரண்டாவது பாதியில், சக டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வீரர் எரிக் டயரிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 62ஆவது நிமிடத்தில் டெலே அல்லி கோலாக்க முன்னிலை பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அடுத்த நான்கு நிமிடங்களில் அவர் பெற்ற இன்னொரு கோலோடு இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சியை வென்று, 28 ஆண்டுகளின் பின்னர் செல்சியை அதன் மைதானத்தில் தோற்கடித்தது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்டோக் சிற்றியுடனான போட்டியில் ஆர்சனல் வென்றது.
இப்போட்டியின் முதலாவது பாதியில் கோலெதனையும் பெற்றிருக்காத ஆர்சனல், மெசூட் ஏஸில் சர்ச்சைக்குரிய வகையில் ப்ரூனோ மார்ட்டின்ஸ் இன்டியால் வீழ்த்தப்பட சர்ச்சைக்குரிய விதத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை போட்டியின் 75ஆவது நிமிடத்தில் பியரி எம்ரிக் அபுமெயாங் கோலாக்க முன்னிலை பெற்ற ஆர்சனல், மெசூட் ஏஸிலின் மூலையுதையை பியரி எம்ரிக் அபுமெயாங போட்டியின் 86ஆவது நிமிடத்தில் கோலாக்க முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது. பின்னர், போட்டி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரேயை படூ என்டியே தள்ளிவிட வழங்கப்பட்ட பெனால்டியை அவர் கோலாக்கியதோடு இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago