2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஜொஸ் மொரின்கோ மீது விமர்சனம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே அழுத்தத்துக்குள்ளாகியுள்ள செல்சி அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்கோ மீது, இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் முமையாகர் பமியோ கபெல்லோ, பார்சிலோனாவின் முன்னாள் முகாமையாளர் ஜொஹான் குருய்ப் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்குள் தனது வீரர்களைக் களைப்படையச் செய்துவிட்டதாக மொரின்கோ மீது கபெல்லோ விமர்சனங்களை முன்வைக்க, தனது விளையாடும் காலத்தில் அதிகளவு வெற்றிகளைப் பெற்றிராத மொரின்கோ, பயிற்றுநராக அதிக பிரபலத்தைத் தேட முயற்சிக்கிறார் என குருய்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் றியல் மட்ரிட் கழகத்தின் பயிற்றுநராக இருந்த போதும், அக்கழகத்தின் வீரர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் களைப்படைந்ததாகக் கதைகள் எழுந்திருந்த நிலையில்தற்போது செல்சியில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கபெல்லோ தெரிவித்தார்.

மறுபுறத்தில், அதிக கவனங்களில் மத்தியில் காணப்படும் நிலையை மொரின்கோ எதிர்பார்க்கக்கூடாது எனத் தெரிவித்த குருய்ப், அவர் சர்ச்சைக்குரியவர் எனவும், எப்போதும் தன்னை முதல் வரிசையில் அமர்த்த அவர் விரும்புகிறார் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .