2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜனவரியில் மட்ரிட்டை விட்டு விலகுகிறார் பேல்?

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் கரெத் பேல், அடுத்தாண்டு ஜனவரியில் றியல் மட்ரிட்டை விலகுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனது முகவரைச் சந்திப்பதற்காக பிரித்தானியத் தலைநகர் இலண்டனுக்கு பேல் நேற்று முன்தினம் பயணமாகியுள்ளதாக கூறப்படுகிற நிலையில், சீன சுப்பர் லீக் கழகமான ஷங்காய் ஷென்ஹுவா பேலைக் கைச்சாத்திடுவதில் மீண்டும் ஆர்வம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயுடன் இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற றியல் மட்ரிட்டின் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிக்கான றியல் மட்ரிட் குழாமில் பேல் இடம்பெறதாததைத் தொடர்ந்தே பேலுக்கும் றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸினடி ஸிடக்குமிடையிலான நம்பிக்கையீனம் அதிகரித்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனிநபர் தரவைப் பாதுகாக்கும் ஸ்பானிய சட்டத்தின் கீழ் தனது மருத்துவப் பதிகளை வெளியிட வேண்டாமென றியல் மட்ரிட்டை பேல் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .