Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், தமது மைதானத்தில் நடைபெற்ற, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுடனான போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
இலங்கை நேரப்படி, நேற்று அதிகாலை இடம்பெற்ற போட்டியின் ஆரம்பத்திலேயே, ஜுவென்டஸுக்கு வழங்கப்பட்ட பிறீ கிக்கை அனுமதிக்க மறுத்திருந்த அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்கள வீரர் டியகோ கொஸ்டாவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பெற்றது. அந்தவகையில், ஜுவென்டஸின் மைதானத்தில் அடுத்த மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த இரண்டு அணிகளுக்குமிடையிலான இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியை கொஸ்டா தவறவிடுகின்றார்.
இந்நிலையில், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலான, ஜுவென்டஸின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செலுத்திய பிறீ கிக்கை அபாரமாகத் தடுத்த அத்லெட்டிகோவின் கோல் காப்பாளர் ஜான் ஒப்ளக், அதை கோல் கம்பத்தின் மேலால் தட்டி விட்டிருந்தார்.
தொடர்ந்த போட்டியின் 28ஆவது நிமிடத்தில், கொஸ்டாவுடன் ஜுவென்டஸின் பின்கள வீரர் மத்தியா டி ஷீரோ மோதுண்ட நிலையில், உடனே மத்தியஸ்தர் பெனால்டியை வழங்கியிருந்தபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்புடன் கலந்தாலோசித்த பின்னர் அதை பெனால்டி பகுதிக்கு சற்று வெளியேயான பிறீ கிக்காக மாற்றியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்கள வீரர் அன்டோனி கிறீஸ்மனின் அபாரமான உதையொன்றை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் வொஜ்டெக் ஸ்டான்ஸே தடுத்திருந்தார். இரண்டாவது பாதியில், 49ஆவது நிமிடத்தில் கிறீஸ்மன் இலாவகமாகக் கொடுத்த பந்தை, ஸ்டான்ஸே எதிர்ப்பக்கமாக பாய்ந்தபோதும் கோல் கம்பத்துக்கு வெளியேயே தனதுதையை கொஸ்டா செலுத்தினார்.
இதையடுத்த கணங்களில், கிறீஸ்மன்னிடமிருந்து இலாவகமாக வந்த பந்தை ஸ்டான்ஸே தடுத்திருந்ததுடன், அது கோல் கம்பத்தில் பட்டு மீண்டு வந்திருந்த நிலையில், அதை கொஸ்டா பெற முன்னர், அதை ஜுவென்டஸின் பின்கள வீரர் ஜியோர்ஜியோ செலினி, எல்லைக்கு வெளியே செலுத்திருந்தார்.
குறித்த தருணத்தை தொடர்ந்து இன்னொரு முன்கள வீரரான அல்வரோ மொராட்டாவால் கொஸ்டா பிரதியிடப்பட்டார். 71ஆவது நிமிடத்தில், மொராட்டா கோலைப் பெற்றபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் துணையுடன் குறித்த கோலை மத்தியஸ்தர் நிராகரித்தார்.
எவ்வாறாயினும், அடுத்த ஏழாவது நிமிடத்தில், மொராட்டா தலையால் முட்டிய பந்து, ஜுவென்டஸின் முன்கள வீரர் மரியோ மண்டூஸிக் தடுக்கப்பட்டநிலையில், அதைக் கோலாக்கிய அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்கள வீரர் ஜொஸே மரியா கிமென்ஸ், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்கள வீரர் டியகோ கொடினின் கோல் கம்பத்தை நோக்கி உதை, ரொனால்டோவில் பட்டுக் கோலாகியதோடு, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
இந்நிலையில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஷல்கே அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அகுரோ, லெரோய் சனே, ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஷல்கே சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பெனால்டி மூலம் நபில் பென்டலெப் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago