2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸ் செல்லும் ஒஸிம்ஹென்?

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 08 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


துருக்கிய கால்பந்தாட்டக் கழகமான கலடசரேயிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலிக்கு நடப்புப் பருவகால முடிவில் முன்களவீரரான விக்டர் ஒஸிம்ஹென் திரும்பும்போது அவரைக் கைச்சாத்திடுவதற்கான தொகையைச் செலுத்தி அவரை இன்னொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் கைச்சாத்திட தயாரகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் காலத்தில் தமது முன்களவீரரான டுஸன் விளாகோவிச் கழகத்தை விட்டுச் செல்வாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 26 வயதான ஒஸிம்ஹென்னை அவரது பிரதியீடாக ஜுவென்டஸ் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒஸிம்ஹென்னைக் கைச்சாத்திட 75 மில்லியன் யூரோக்கள் தேவையென்ற நிலையில் அதை பேரம்பேச ஜுவென்டஸ் முயலுமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X