Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்களுக்கிடையிலான இங்கிலாந்துக் குழாமின் நூஸா குறு விடுப்பின்போது பென் டக்கெட் மது அருந்தி விட்டு அணி ஹொட்டலுக்கு திரும்பச் செல்ல முடியாமல் தடுமாறுவதை காண்பிக்கும் காணொளி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணை நடாத்தவுள்ளது.
நூஸாவுக்கான பயணம் குறித்து விசாரணை இடம்பெறுமென இங்கிலாந்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றொப் கீ தெரிவித்ததைத் தொடர்ந்தே குறித்த காணொளி செவ்வாய்க்கிழமை (23) வெளிவந்திருந்தது.
முன்னதாக 2017-18ஆம் ஆண்டு தொடரின்போது ஏ அணிக் குழாமிலிருந்த டக்கெட், ஜேம்ஸ் அன்டர்சன் மீது மதுபான விடுதியில் மதுவை ஊற்றியதற்காக அபராதம், இடைநிறுத்தத்துடன் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
8 minute ago
12 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
23 minute ago