Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு றோயல் கோல்ஃப் கழகத்தில் சனிக்கிழமை (25) நடைபெறவுள்ள டயலொக் கிளப் விஷன் றோட்டறி பார் 3 கோல்ப் கிளாசிக் போட்டி குறித்து கொழும்பு மெட்ரோபொலிட்டன் றோட்டரிக் கழகம் அறிவித்துள்ளது. மெட்ரோபொலிட்டன் றோட்டரி தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற முக்கியமான சமூக சேவை முயற்சிகளுக்கு உதவுவதற்காக, விளையாட்டு, தோழமை, மற்றும் பரோபகாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இலங்கையில் கோல்ஃப் விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு நிகழ்வாக இது தொடர்ந்தும் திகழ்ந்து வருகின்றது.
இந்த முக்கியமான தொண்டுப்பணி நிகழ்வுக்காக தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இம்முறையும் இச்சுற்றுப்போட்டிக்காக மெட்ரோபொலிட்டன் றோட்டரியுடன் டயலொக் கைகோர்த்துள்ளமை சமூகத்திற்கு பிரதியுபகாரம் ஆற்றுவதில் அந்நிறுவனம் கொண்டுள்ள நீடித்த அர்ப்பணிப்பிற்கு சான்று பகருகின்றது. விளையாட்டின் மூலமாக சமூகத்தின் நல்வாழ்வை வலுப்படுத்துகின்ற மற்றும் மக்களை ஒன்றிணைக்கின்ற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்ற டயலொக்கின் பெருமைமிக்க பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக 2025 ல் இந்நிகழ்வின் முதன்மை அனுசரணையாளராக Dialog Club Vision நடுநாயகமாக விளங்குகின்றது.
கொழும்பு றோயல் கோல்ஃப் கழகத்தில் பாரம்பரியமான 18-துளை அமைப்பை, 54 முறை முயற்சிக்கும் அமைப்பு கொண்டதாக மாற்றியமைக்கின்ற ஒரு தனித்துவமான வடிவமைப்பிற்காக Dialog Club Vision Rotary Par 3 Golf Classic நிகழ்வு பெயர்பெற்றுள்ளது. இது கோல்ஃப் வீரர்களுக்கு ஒவ்வொரு துளையும் 3 முயற்சிகளைக் கொண்ட (பார் 3) ஆட்டமாக மாற்றி, தனித்துவமான சவாலைத் தோற்றுவிக்கின்றது. இலங்கையின் வர்த்தக, இராஜதந்திர, மற்றும் விளையாட்டு சமூகங்கள் மத்தியில் ஆர்வத்துடனான பங்குபற்றலை இச்சுற்றுப்போட்டி ஈர்ப்பதுடன், ஆட்டத்தின் தொடக்க மற்றும் முடிவு நேரங்கள் முறையே மு.ப 7.00 மற்றும் பி.ப 12.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இப்போட்டியானது வெறுமனே ஒரு கோல்ஃப் தொடர் என்பதற்கும் மேலாக, மெட்ரோபொலிட்டன் றோட்டரி சமூகச் செயற்திட்டங்களுக்கு, குறிப்பாக றோட்டரி போர் லிட்டில் ஹாட்ஸ் செயற்திட்டத்திற்கு நிதியைத் திரட்டுவதற்கான மேடையாகும். சீமாட்டி றிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர்களுக்கான இருதய சிகிச்சைப் பிரிவை விரிவுபடுத்துவதற்காக இம்முயற்சியினூடாக ஏற்கனவே 600,000 அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட தொகை திரட்டப்பட்டுள்ளது. பிறவியிலேயே இருதய வியாதியைக் கொண்ட சிறுவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை வசதிகளை தரமுயர்த்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை திரட்ட வேண்டும் என்ற றோட்டரி மாவட்டம் 3220 ன் (Rotary District) இலக்கின் ஒரு அங்கமாக இது காணப்படுகின்றது.
அர்த்தமுள்ள இம்முயற்சிக்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொழும்பு மெட்ரோபொலிட்டன் ஹோட்டரிக் கழகத்துடன் டயலொக் பெருமையுடன் கைகோர்த்துள்ளது. பகிரப்பட்ட ஒரு இலக்குடன் ஆரம்பித்த பயணம், நற்பேறை அத்திவாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட, நீடித்து நிலைபெற்றுள்ள கூட்டாண்மையான வளர்ச்சி கண்டுள்ளதுடன், சமூகங்களை மேம்படுத்துகின்ற நோக்கங்களுக்கு முன்னின்று உழைக்கும் அதேசமயம், கோல்ஃப் விளையாட்டின் உத்வேகத்தின் மூலமாக தலைவர்களை ஒன்றுபடுத்துகின்றது. இலங்கையின் உயர் மட்ட மற்றும் மிகவும் பிரத்தியேகமான நம்பிக்கை உறுப்புரிமைத் திட்டமான Dialog Club Vision, தனித்துவத்தின் அடையாளம் என்பதற்கும் மேலானது. இது கருணை மற்றும் செயல் நடவடிக்கை மூலமாக மாற்றத்திற்கு உத்வேகமளிக்கின்ற தலைவர்களைக் கொண்டதொரு சமூகமாகும். இந்த ஆண்டின் தலைப்பு அனுசரணையாளர் என்ற வகையில், வாழ்வுகளை வளப்படுத்துகின்ற அர்த்தமுள்ள பிணைப்புக்கள் மற்றும் அனுபவங்களைத் தோற்றுவிப்பதில் தனது அர்ப்பணிப்பை Dialog Club Vision மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஏஷியா செக்கியுரிட்டிஸ் இந்நிகழ்வின் பிளாட்டினம் அனுசரணையாளராக கைகோர்த்துள்ளது. இந்த ஆண்டில் தங்க அனுசரணையாளராக இலங்கை வங்கி ஆதரவை வழங்குகின்றது. எயார் இந்தியா, அபிகோ, ஹேலீஸ் அக்ரிகல்சர் ஆகிய நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago