Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல, முன்னாள் அணித்தலைவர் உள்ளடங்கலாக 10 சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு இம்மாதமும், அடுத்த மாதமும் சுற்றுப்பயணம் செல்ல மறுத்ததைத் தொடர்ந்து கரீபியன் பிறீமியர் லீக்கில் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை டிக்வெல்லவுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளதுடன், கரீபியன் பிறீமியர் லீக்கின் பெரும்பான்மையான பகுதியில் திஸர விளையாடுவதைத் தடுக்கவுள்ளது.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வாவின் கருத்துப்படி வீரரொருவர் தெரிவாகக்கூடிய தேசிய சுற்றுப்பயணமொன்று இருக்கும்பட்சத்தில், தானாகவே தேசிய அணியில் விளையாடுவதிலிருந்து விலகினால் வெளிநாட்டு லீக்கொன்றில் விளையாடுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் விடுவது இலங்கை கிரிக்கெட் சபையின் கொள்கையாக உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணமானது பாதுகாப்பானதென இலங்கை கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு மதிப்பீடுகள் இருந்தபோதும் டிக்வெல்ல, திஸர தவிர இலங்கையணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டி, டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மாலிங்க, முன்னாள் தலைவர்களான அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால் மற்றும் குஷல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய ஆகிய முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய மறுத்தமைக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் இன்னொரு அதிகாரியும் பலத்த விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே கரீபியன் பிறீமியர் லீக்கின் சென். லூசியா ஸூக்ஸுக்காக இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள திஸர பெரேராவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
34 minute ago
41 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
45 minute ago
1 hours ago