Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2011ஆம் ஆண்டு பருவகாலத்தின்போது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் உரிமையாளரொருவரால் தான் அறையப்பட்டதாக நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் றொஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
தனது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே குறித்த விடயத்தை டெய்லர் வெளிப்படுத்தியுள்ளதுடன், மொஹாலியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப்புடனான போட்டியின் பின்னரே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறியுள்ளார்.
வெற்றி இலக்கு 195 ஓட்டங்களாக இருக்கும்போது தான் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தாகவும் தாங்கள் வெற்றியிலக்கை நெருங்கவில்லையெனவும் பின்னர் ஹொட்டலின் மேற்தளத்தின் மதுபான விடுதியில் அணி, பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள் இருக்கும்போது ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழப்பதற்காக உங்களுக்கு மில்லியன் டொலர்களை செலுத்தவில்லை என உரிமையாளரொருவர் கூறியதாகவும், பின்னர் மூன்று அல்லது நான்கு தடவைகள் முகத்தில் அறைந்ததாக டெய்லர் வெளிப்படுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
18 May 2025