2025 மே 17, சனிக்கிழமை

டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Freelancer   / 2023 ஜூலை 11 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, டொமினிக்காவில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட், உப அணித்தலைவர் ஜெர்மைன் பிளக்வூட், கேமார் றோச், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் பெறுபேறுகளைப் பொறுத்தே இந்தியாவுக்கு சவாலளிப்பது குறித்து மேற்கிந்தியத் தீவுகள் சிந்திக்கலாம்.

மறுபக்கமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள செட்டேஸ்வர் புஜாராவின் இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் யஷஸ்வி ஜைஸ்வால் எவ்வாறு செயற்படுவார் மற்றும் மொஹமட் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் மொஹமட் சிராஜ் தலைமையில் ஷர்துல் தாக்கூர், ஜெய்டேவ் உனத்கட்டை உள்ளடக்கிய வேகப்பந்துவீச்சுக் குழாம் எவ்வாறு செயற்படுமென கேள்விக்குறிகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .