2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

டெஸ்ட்களிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஹபீஸ்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் சிரேஷ்ட சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வுபெறவுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக பாகிஸ்தானின் தலைமைத் தேர்வாளர் இன்ஸமாம்-உல்-ஹக்குக்கு அறிவித்தமையைத் தொடர்ந்தே 38 வயதான ஹபீஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.

குறித்த போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவைத் தொடர்ந்து தனது முடிவை அறிவித்த ஹபீஸ், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்படுத்த எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

2003ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கான தனது அறிமுகத்தை மேற்கொண்ட ஹபீஸ், 55 டெஸ்ட்களில் விளையாடி 3,644 ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்டில் பாகிஸ்தான் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடினால் இறுதியாக துடுப்பெடுத்தாடும் வாய்ப்பொன்றை பெறுவார்.

நியூசிலாந்துக்கெதிரான இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட்களிலும் வெறும் 39 ஓட்டங்களையே நான்கு இனிங்ஸ்களிலும் பெற்றதோடு, விக்கெட்டெதையும் கைப்பற்றாத நிலையிலேயே டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை ஹபீஸ் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .