2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Editorial   / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 அணிகள் பங்கேற்றுள்ள 16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு (24) நடந்த 34 ஆவது லீக்கில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் 145 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்று (24) நடந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக டெல்லி அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால் டேவிட் வார்னருக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .