Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரில் புதிய ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திடமாட்டேன் என அக்கழகத்தின் மத்தியகளவீரர் கிறிஸ்டியன் எரிக்சன் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அவரை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரில் தக்க வைக்கும் எந்த முயற்சிகளையும் நிராகரிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ பதவியேற்ற பின்னர் மூன்று தொடர் வெற்றிகளும், அக்கழகத்தின் பின்களவீரர்களான டொபி அல்டர்வெய்ல்டும், ஜான் வெர்டொங்கனும் புதிய ஒப்பந்தங்களுக்கு இணங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறெனினும், தனது ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்தில் முடிவடையும்போது டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரிலிருந்து வெளியேறுவதையே கிறிஸ்டியன் எரிக்சன் நோக்கமாகக் கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
அந்தவகையில், இத்தாலிய சீரி ஏ கழகங்களான ஜுவென்டஸ், இன்டர் மிலன் ஆகியவை கிறிஸ்டியன் எரிக்சனைக் கைச்சாத்திட எதிர்பார்க்கின்றன. முன்னதாக, கிறிஸ்டியன் எரிக்சனைக் கைச்சாத்திடும் விருப்பத்தை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் முன்னர் வெளிப்படுத்தியிருந்தபோதும் அது சரி வந்திருக்கவில்லை.
20 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
51 minute ago
1 hours ago