2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

டொட்டென்ஹாமுக்குச் செல்லும் டி மரியா?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 27 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மத்தியகளவீரரான ஏஞ்சல் டி மரியாவை, நடப்பு பருவகால முடிவில் கைச்சாத்திடுவது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணுகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டி மரியாவின் பரிஸ் ஸா ஜெர்மைனுடனான ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்தில் முடிவடைகின்ற நிலையில், அவர் இரண்டாண்டு ஒப்பந்த நீடிப்பொன்றை எதிர்பார்க்கின்றார். இந்நிலையில், ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பரிஸ் ஸா ஜெர்மைனுக்காக 243 போட்டிகளில் விளையாடியுள்ள டி மரியா, 86 கோல்களைப் பெற்றுள்ளதோடு, 102 கோல்கள் பெறுவதற்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .