Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 15 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் கோல் காப்பாளர் டேவிட் டி கியீயின் சிறப்பான கோல் காப்புப் பணியின் உதவியுடன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்கெதிரான போட்டியை, மன்செஸ்டர் யுனைட்டெட் அணி வெற்றிபெற்றது. இதன்மூலமாக, இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றும் டொட்டென்ஹாமின் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது.
போட்டியின் 44ஆவது நிமிடத்தில், போல் பொக்வாவிடமிருந்து கிடைத்த அற்புதமான பந்துப் பரிமாற்றத்தைப் பயன்படுத்திய மார்க்ஸ் றஷ்போர்ட், சிறப்பான கோலொன்றைப் பெற்று, யுனைட்டெட் அணிக்கு முன்னிலையை வழங்கினார்.
ஆனால், இரண்டாவது பாதிக்குப் பின்னர், டொட்டென்ஹாம் அணி, கடுமையான தாக்குதலாட்டத்தை மேற்கொண்டது. யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட், மிகச்சிறப்பான கோல் காப்பை மேற்கொண்டு, எந்தவொரு கோலையும் அனுமதித்திருக்கவில்லை. இப்போட்டியில், கோல் கம்பத்தை நோக்கிச் சென்ற 11 பந்துகளை அவர் தடுத்திருந்தார். அவ்வாறு அவர் தடுத்தவற்றில் பல, அவரது கால்களால் தடுக்கப்பட்டிருந்தன.
யுனைட்டெட்டின் முகாமையாளராக இருந்த ஜொஸெ மொரின்யோ, அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், இடைக்கால முகாமையாளராக நியமிக்கப்பட்ட ஒலே குன்னேரின் முகாமையின் கீழ், யுனைட்டெட் அணி பங்குபற்றிய 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவைத் தொடர்ந்து, 3ஆவது இடத்திலுள்ள டொட்டென்ஹாம் அணி, முதலிடத்திலுள்ள லிவர்பூலை விட, 9 புள்ளிகளால் பின்தங்கியுள்ளது. எனவே, பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான அவ்வணியின் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மறுபக்கமாக, தொடர்ச்சியான வெற்றிகளுடன் உதவியுடன், 6ஆவது இடத்தில் யுனைட்டெட் அணி காணப்படுகிறது. நான்காவது இடத்திலுள்ள செல்சி அணியை விட 6 புள்ளிகளால் பின்தங்கியுள்ள யுனைட்டெட், முதல் 4 இடங்களுக்குள் தொடரை நிறைவுசெய்வது தொடர்பில் நம்பிக்கையை மீளவும் பெற்றுள்ளது.
ஏனைய போட்டியொன்றில், போர்ண்மெத் அணியை எதிர்கொண்ட எவேர்ட்டன் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago