2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டோக்கியோ 2020: 800 மீற்றரில் தங்கம் வென்ற லெடக்கி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 31 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான 800 மீற்றர் நீச்சல் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் கேட்டி லெடக்கி தங்கம் வென்றார்.

அந்தவகையில் ஆறு தனிப்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற முதலாவது நீச்சல் வீராங்கனையாக லெடக்கி மாறியிருந்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் உலக சாதனையை ஐ. அமெரிக்காவின் கலெப் ட்ரஸல் முறியடித்திருந்தார். போட்டித் தூரத்தை 49.45 செக்கன்களில் கடந்து ட்ரஸல் தங்கப் பதக்கத்தை வென்று, தனது முந்தைய 49.5 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்திருந்தார்.

இந்நிலையில், முதலாவது 4*100 மீற்றர் மெட்லி அஞ்சல் நீச்சல் போட்டியில், மூன்று நிமிடங்கள் 37.58 செக்கன்கள் என்ற உலக சாதனை நேரப் பெறுதியுடன் பிரித்தானிய தங்கப் பதக்கம் வென்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .