2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

டோக்கியோ 2020: அஞ்சலோட்ட இறுதிக்குத் தகுதி பெறாத ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஐக்கிய அமெரிக்கா தவறியுள்ளது.

முதலாவது சுற்றுப் போட்டியில் ஆறாவதாகவே ஐ. அமெரிக்கா வந்திருந்தது.

இந்நிலையில், ஆண்களுக்கான 10 கிலோ மீற்றர் மரதன் நீச்சலில், ஜேர்மனியின் புளோரியன் வெல்புரோக் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். ஹங்கேரியின் கிறிஸ்டோஃப் றஸோவ்ஸ்கி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, மூன்றாமிடத்தை இத்தாலியின் கிரேகொரியோ பல்றினேரி பெற்றார்.

இதேவேளை, ஆண்களுக்கான வெண்கலப் பதக்கத்துக்கான ஹொக்கிப் போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வென்று இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

இந்நிலையில், ஆண்களுக்கான 20 கிலோ மீற்றர் நடைப் போட்டியில் இத்தாலியின் மஸ்ஸிமோ ஸ்டானோ தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ஜப்பானின் கொகி லெகெடா வெள்ளிப் பதக்கத்தையும், டொஷிஸு யமனிஷி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .