Shanmugan Murugavel / 2021 ஜூலை 25 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இலங்கையின் மில்கா ஜெஹானி தவறியுள்ளார்.
வோல்டில் 13.366, அன்ஈவின் பாரில் 10.866, பலன்ஸ் பீமில் 11.266, புளோரில் 10.300 என்றவாறு மொத்தமாக 45.798 புள்ளிகளைப் பெற்ற மில்கா, நான்காவது தகுதிகாண் போட்டிகள் இன்று பிற்பகலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது 46ஆவது இடத்தில் காணப்பட்டிருந்தார்.
அந்தவகையில், இறுதிப் போட்டிக்கு முதல் 24 வீராங்கனைகளுமே தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, அதிர்ச்சிகரமாக முதலாவது சுற்றுடனேயே தனிநபர் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெய்னின் சரா சொரிபெஸ்ஸிடம் பார்ட்டி தோல்வியடைந்திருந்தார்.
பதக்கப் பட்டியலில், நான்கு தங்கங்கள், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் முதலாவதாக சீனா காணப்படுகின்றது. மூன்று தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாமிடத்தில் ஜப்பான் காணப்படுவதுடன், இரண்டு தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் ஐக்கிய அமெரிக்கா காணப்படுகின்றது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago