Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் ஐக்கிய அமெரிக்காவின் சிட்னி மக்லொக்லின் சாதனை படைத்துள்ளார்.
போட்டித் தூரத்தை 51.46 செக்கன்களில் கடந்த மக்லொக்லின், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் ஐ. அமெரிக்க தகுதிகாண் போட்டிகளில் தான் ஏற்படுத்திய 51.90 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியை முறியடித்தார்.
இதேவேளை, பெண்களுக்கான 10 கிலோ மீற்றர் மரதன் நீச்சலில், பிரேஸிலின் அனா மார்செலா குன்ஹா தங்கப் பதக்கம் வென்றார். இரண்டாமிடத்தை நெதர்லாந்தின் ஷரோன் வான் றெளவென்டால் பெற்றதோடு, அவுஸ்திரேலியாவின் கரீனா லீ மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .