2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

டோக்கியோ 2020: உலக சாதனை படைத்த வார்ஹொம்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் நோர்வேயின் கர்ஸ்டன் வார்ஹொம் உலக சாதனை படைத்துள்ளார்.

போட்டித் தூரத்தை 45. 94 செக்கன்களில் வார்ஹொம் கடந்து, கடந்த மாதம் தான் ஏற்படுத்திய 46.70 செக்கன்கள் என்ற உலக சாதனைப் பெறுதியை முறியடித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாமிடத்தைப் பெற்ற ஐ. அமெரிக்காவின் ராஜ் பெஞ்சமின்னும் 46.17 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து, முன்னைய வார்ஹொம்மின் உலக சாதனைப் பெறுதியை விட குறைந்த நேரத்தில் போட்டித் தூரத்தைக் கடந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .