Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2021 ஜூலை 22 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளின் அங்குரார்ப்பண வைபவத்தில் பங்கேற்பதற்காக இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ அங்கு பயணமாகியுள்ளார்.
அவருக்கு, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா, தூதுக்குழுவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான கிட்டமுரா டொஷிஹிரோ ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
2021 ஜூலை 21 ஆம் திகதி டோக்கியோவுக்கு புறப்படும் முன்னர் அமைச்சரை சந்தித்து தமது நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 இன் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு விஜயம் செய்யும் அமைச்சர் ராஜபக்சவுக்கு, கிட்டமுரா தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அத்துடன், இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜுலை 23ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பரா ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபடுவதற்கான சர்வதேச கைகோர்ப்பின் அடையாளமாக இந்தப்போட்டிகள் அமைந்திருப்பதாக ஜப்பான் கருதுகின்றது. இந்தப் போட்டிகளை மிகவும் பாதுகாப்பானதான முறையில் முன்னெடுப்பதற்கு இயலுமான சகல கடும் முற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .