2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டோக்கியோ 2020: கால்பந்தாட்டத்தில் அரையிறுதியில் பிரேஸில், ஸ்பெய்ன்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்கு நடப்புச் சம்பியன்களான பிரேஸில், ஸ்பெய்ன், மெக்ஸிக்கோ, ஜப்பான் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

மத்தெயெஸ் குனியா பெற்ற கோலுடன் எகிப்துடனான காலிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றிருந்தது.

இந்நிலையில், ஐவரிகோஸ்டை 5-2 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் வென்று அரையிறுதிப் போட்டிக்குக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றிருந்தது. வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி காணப்பட்டிருந்தது. அப்போது ஸ்பெய்ன் சார்பாக, டனி ஒல்மோ, றாஃபா மிர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, ஐவரிகோஸ்ட் சார்பாக, எரிக் பெய்லி, மக்ஸ் கிரடெல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். மேலதிக நேரத்தில், மிர் மேலும் இரண்டு கோல்களையும், மிகேல் ஒயர்ஸபல் ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.

இதேவேளை, மற்றைய காலிறுதிப் போட்டிகளில், தென் கொரியாவை 6-3 என்ற கோல் கணக்கில் வென்று மெக்ஸிக்கோவும், நியூசிலாந்தை 4-2 என்ற ரீதியில் பெனால்டியில் வென்று ஜப்பானின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .