2025 மே 21, புதன்கிழமை

டோக்கியோ 2020: தோல்வியையடுத்து திருமண முன்மொழிவு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து ஆர்ஜென்டீனாவின் பென்சிங் வீராங்கனையான மரியா பெலென் பெரேஸ் மெளரிஸ், அவரது பயிற்சியாளர் லூகாஸ் குய்ல்லெர்மோ செளசெடோவிலிருந்து “தயவு செய்து நீ என்னைத் திருமணம் செய்து கொள்கின்றாயா” என்ற கையெழுத்தால் எழுதப்பட்ட பதாதையை கண்டுள்ளார்.

 17 ஆண்டுகளாக மெளரிஸேயின் துணை, பயிற்சியாளராக இருக்கும் செளசெடோவின் இரண்டாவது முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ஆம் ஆண்டு செளசெடோவின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்முறை ஆம் என மெளரிஸே பதிலளித்திருந்தார்.

ஹங்கேரியின் அன்னா மார்டனுடனான இறுதி 32 பேருக்கான சுற்றுப் போட்டியில் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் மெளரிஸே தோற்றமையை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .