2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

டோக்கியோ 2020: பகிர்ந்து கொள்ளப்பட்ட தங்கம்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான நீளம் பாய்தலில், கட்டாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிம், இத்தாலியின் ஜியன்மார்கோ தம்பேரி ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பார்ஷிம்மும், தம்பேரியும் 2.37 மீற்றர் உயரங்களைப் பாயந்த நிலையில், 2.39 மீற்றரை முயலும் வரையில் எதுவித தடங்கலையும் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில், 2.39 மீற்றரை மூன்று முயற்சிகளிலும் இருவரும் கடக்காத நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கு ஒரு பாய்தலொன்றை அதிகாரியொருவர் வழங்கியிருந்தார்.

அந்தவகையில், அவ்வதிகாரியை தாங்கள் இரண்டு தங்கப் பதக்கங்களைக் கொண்டிருக்கலாமா என பார்ஷிம் வினவியிருந்தார். இதையடுத்து அதற்கு அதிகாரி சம்மதித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .