2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

டோக்கியோ 2020: மல்யுத்தத்தில் தொடர்ச்சியாக நான்காவவது தங்கம்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின்போது தொடர்ச்சியான தனது நான்காவது தங்கப் பதக்கத்தை கியூபாவின் மிஜைன் லொபெஸ் வென்றுள்ளார்.

130 கிலோ கிராம் எடை கிரேக்க-றோமன் மல்யுதத்தின் இறுதிப் போட்டியில் ஜோர்ஜியாவின் லகோபி கஜையாவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே லொபேஸ் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அந்தவகையில் ஒரே தனிநபர் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற போல் எல்வ்ஸ்ரோம் (படகோட்டம்), அல் ஒயெர்டர் (தட்டெறிதல்), கார்ல் லூயிஸ் (நீளம் பாய்தல்), மைக்கல் பெல்ப்ஸ் (200 மீற்றர் மெட்லி) ஆகியோருடன் லொபேஸ் இணைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .