Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜூலை 28 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் நாளை நடைபெறவுள்ள தனிநபர் அனைத்து வகையான ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் விலகியுள்ளார்.
தனது உளநலனில் கவனஞ் செலுத்தும் பொருட்டே இப்போட்டிகளின் நடப்புச் சம்பியனான பைல்ஸ் விலகியுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து இவ்வகைப் போட்டிகளில் தொடர்ந்து பைல்ஸே வென்று வந்திருந்தார்.
முன்னதாக அணிப் போட்டியின்போதும் வோல்டில் நேற்று பங்கேற்ற பின்னர் பைல்ஸ் விலகியிருந்தார். அந்தவகையில், ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழுவின் அணி தங்கப் பதக்கத்தை வெல்ல, ஐ. அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தையே வென்றிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தனிநபர்ப் போட்டிகளில் பைல்ஸ் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் அவர் மதிப்பிடப்படவுள்ளார். நான்கு வகையான தனிநபர் இறுதிப் போட்டிகளுக்கும் பைல்ஸ் தகுதி பெற்றுள்ளை குறிப்பிடத்தக்கது. தகுதிகாண் போட்டிகளில் பைல்ஸே அனைத்திலும் முதன்மை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago