Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் அலிஸன் பீலிக்ஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தற்போது முடிவுக்கு வந்த இப்போட்டியில் 49.46 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்தே பீலிக்ஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.
48.36 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த பஹாமாஸின் ஷோனி மில்லர்-உய்போ தங்கப் பதக்கத்தை வென்றதுடன், 49.20 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த டொமினிக் குடியரசின் மரிலெய்டி போலின்ஹோ வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .