Shanmugan Murugavel / 2021 ஜூலை 19 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள 32ஆவது ஒலிம்பிக் போட்டிகளின்போது ஐந்து விளையாட்டுக்களையும், மொத்தமாக 34 நிகழ்வுகளையும் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு சேர்த்துள்ளது.
இளம் பார்வையாளர்களை கவரும் பொருட்டும், விளையாட்டு நவீனப்படுத்தப்படுவதை பிரதிபலிக்கும் பொருட்டே குறித்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அந்தவகையில், கராத்தே, ஸ்கேட்போர்டிங்க், ஸ்போர்ட் கிளைம்பிங், சேர்ஃபிங், பேஸ்போல் ஆகியனவே அறிமுகப்படுத்தப்படும் புதிய விளையாட்டுக்கள் ஆகும்.
இதில், ஒலிம்பிக்குக்கு பேஸ்போல் புதிது இல்லை என்றபோதும் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து குறித்த விளையாட்டு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவை தவிர கலப்பு 4*400 மீற்றர் அஞ்சலோட்டம், ஆண்களுக்கான 800 மீற்றர் பிறீ ஸ்டைல் நீச்சல், பெண்களுக்கான 1,500 மீற்றர் பிறீ ஸ்டைல் நீச்சல், 4*100 மீற்றர் கலப்பு மெட்லே அஞ்சல் உள்ளிட்ட போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
37 minute ago
46 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
50 minute ago
1 hours ago