Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஓவலில் முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி வென்றமையைத் தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2-2 என்ற சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் 328 ஓட்டங்களைப் பெற்றது. மொயின் அலி 108 ஓட்டங்களைப் பெற்றதோடு, சொஹைல் கான் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 542 ஓட்டங்களைக் குவித்தது. யுனிஸ் கான் 218, அசாட் ஷஃபிக் 109 ஓட்டங்களைப் பெற்றனர். ஸ்டீவன் ஃபின், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையனையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஜொனி பெயார்ஸ்டோ 81 ஓட்டங்களைப் பெற்றதுடன் யசீர் ஷா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து, 40 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, எதுவித விக்கெட் இழப்புமில்லாமல் வெற்றியிலக்கை அடைந்து 10 விக்கெட்டுகளால் போட்டியை வென்றது.
போட்டியின் நாயகனாக யுனிஸ் கான் தெரிவானதோடு, பாகிஸ்தான் அணியின் தொடர் நாயகனாக அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக்கும் இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக கிறிஸ் வோக்ஸ{ம் தெரிவாகினர்.
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago