2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற ரேணு

Freelancer   / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க டிகேஜி கபில

தென் கொரியாவில் நடைபெற்ற 45வது உலக சிரேஷ்ட பூப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருமதி ரேணு சந்திரிகா டி சில்வா ​நேற்று இரவு(19) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

96 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1800 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி தென் கொரியாவின் ஜியோன்ஜு நகரில் கடந்ந(11) திகதி திங்கட்கிழமை முதல் (17) ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஒற்றையர் பிரிவில் ரேணு சந்திரிகா டி சில்வா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த இரட்டையர் ஆட்டத்தில் ரேணு சந்திரிகாவின் துணை வீராங்கனை ஜெர்மனியைச் சேர்ந்த கிளாடியா.

இந்த சாதனைகளுடன் சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SK-468 இல் 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X