2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தொடரை வென்ற தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 09 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா வென்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்ற தென்னாபிரிக்கா, புலவாயோவில் ஞாயிற்றுக்கிழமை (06) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (08) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியை இனிங்ஸ் மற்றும் 236 ஓட்டங்களால் வென்ற நிலையிலேயே 2-0 என்ற ரீதியில் தொடரை வென்றது.

மூன்றாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த சிம்பாப்வே, செனுரன் முத்துசாமி (3), அணித்தலைவர் வியான் முல்டர், கோடி யூசுஃப் (2), கொர்பின் பொஷ்ஷிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களையே பெற்றது. நிக் வெல்ஷ் 55, அணித்தலைவர் கிறேய்க் எர்வின் 49, தகுட்ஸ்வனஷே கைட்டானோ 40 ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் முல்டர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .