2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தொடரைக் கைப்பற்றப்போவது யார்?

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்ற நிலையில் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையணியின் அவிஷ்க பெர்ணாண்டோ தொடர்ந்தும் சொதப்பி வருகின்ற நிலையில் இப்போட்டியிலாவது தினேஷ் சந்திமாலுக்கு வாய்ப்புக் கிடைக்குமா அல்லது கமிந்து மென்டிஸ் மூலமாவது பிரதியிடுவாரென தெளிவில்லாமலுள்ளது. தவிர ஜெஃப்ரி வன்டர்சேக்குப் பதிலாக வெல்லலாகே களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பங்களாதேஷ் அணியில் மாற்றங்கள் இருக்காதென நம்பப்படுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X