2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதை வரவேற்கும் தஸ்கின்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருபதுக்கு – 20 போட்டிகளில் அனுபவத்தைப் பெறுவதற்கு அந்தந்த தொடர்கள் உதவுகின்ற நிலையில், அதற்கு தடையில்லாச் சான்றிதழை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்குவதை அந்நாட்டின் வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மட் திங்கட்கிழமை (29) வரவேற்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச லீக் இருபதுக்கு – 20 தொடரில் தஸ்கின் விளையாட தடையில்லாச் சான்றிதழை வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இது தவிர இந்தியன் பிறீமியர் லீக்கில் விளையாட இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு அனுமதியளிக்கப்பட்டதுடன், சுழற்பந்துவீச்சாளர் ரிஷாட் ஹொஸைனுக்கு பிக் பாஷ் லீக்கில் விளையாட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .