Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனைத் தடுத்து பெல்ஜியன் குரான் பிறீயை வென்ற பெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள் லெக்கலெர்க், போர்மியுலா வண்ணில் தனது முதலாவது வெற்றியை நேற்றிரவு பதிவுசெய்து கொண்டார்.
இந்நிலையில், தான் போர்மியுலா வண்ணுக்கு வர முன்பதாக தனக்கெதிராக போட்டியிட்டு கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போர்மியுலா டூ விபத்தொன்றில் உயிரிழந்த பிரெஞ்சு ஓட்டுநரான அன்டோனி ஹபேர்ட்டுக்கு தனது குறித்த வெற்றியை சார்ள்ஸ் லெக்கலெர்க் அர்ப்பணித்திருந்தார்.
இப்பந்தயத்தில் இரண்டாமிடத்தை லூயிஸ் ஹமில்டன் பெற்றிருந்த நிலையில், அவரின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்டேரி போத்தாஸ் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்ததோடு, நான்காமிடத்தை பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியல் வெட்டல் பெற்றிருந்தார். ஐந்தாமிடத்தை, 17ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் தாய்லாந்து ஓட்டுநரான அலெக்ஸான்டர் அல்போன் பெற்றிருந்தார்.
இப்பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து செபஸ்டியல் வெட்டல் ஆரம்பித்திருந்தபோது, முதலாவது வளைவிலேயே, மூன்றாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த லூயிஸ் ஹமில்டன், அவரை முந்தியிருந்தார்.
அல்ஃபா றோமியோ அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனனுடன் மோதுண்ட றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், பந்தயத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இப்பந்தயத்தின் முடிவில், இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் 268 புள்ளிகளோடு, இரண்டாமிடத்திலிருந்தும் வல்டேரி போத்தாஸின் 203 புள்ளிகளிலிருந்து 65 புள்ளிகள் வித்தியாசத்தோடு தனது முதலிட இடைவெளியை லூயிஸ் ஹமில்டன் மேலும் அதிகரித்துள்ளார். 181 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும், 169 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செபஸ்டியன் வெட்டலும், 157 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் சார்ள்ஸ் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
4 hours ago