2025 ஜூலை 05, சனிக்கிழமை

தனிமைப்படுத்தப்படும் நாப்போலி வீரர்கள்

Editorial   / 2019 நவம்பர் 05 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான முடிவுகளைத் தொடர்ந்து, இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான நாப்போலியின் வீரர்கள், அக்கழகத்தின் பயிற்சி மய்யத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அக்கழகத்தின் தலைவர் ஒளரில்லோ டி லெளரென்டிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று போட்டிகளில் சீரி ஏயில் நாப்போலி வெல்லவில்லை என்பதுடன், றோமாவுடனான போட்டியில் கடந்த சனிக்கிழமை தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் ஏழாமிடத்தில் காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே, சீரி ஏயில் மோசமான பெறுபேறுகள் பெறப்படும் பட்சத்தில் கழகத்தின் பயிற்சி மய்யத்தில் வீரர்கள் தீர்மானிக்கப்பட்ட காலத்துக்கு அடைக்கப்பட்டிருக்கும் முடிவை ஒளரில்லோ டி லெளரென்டிஸ் எடுத்துள்ளார்.

இதேவேளை, நாப்போலியே இம்முடிவை எடுத்ததாகவும், தான் இதனுடன் இணங்கவில்லை என நாப்போலியின் முகாமையாளர் கார்லோ அன்சிலோட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த பருவகால முடிவில் இன்னொரு சீரி ஏ கழகமான ஏ.சி மிலனின் வீரர்களும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டிருந்ததுடன், பருவகாலத்தின் ஆரம்பத்தில் பிறிதொரு சீரி ஏ கழகமான றோமாவின் வீரர்களும் குறித்த நிலையை எதிர்கொண்டிருந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .