Shanmugan Murugavel / 2026 மார்ச் 12 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் இஷன் கிஷன் முன்னேறியுள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் 39, இறுதியில் 54 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை அரையிறுதிப் போட்டியில் 58, இறுதிப் போட்டியில் 52 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டிம் செய்ஃபேர்ட், 10ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் அடில் ரஷீட், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இது தவிர அரையிறுதியில் 1, இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago