2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தருஷி கருணாரத்ன, கலிங்க குமார, நாடு திரும்பினர்

Editorial   / 2024 ஜூன் 20 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச   தடகளப் போட்டியில் பங்கேற்று இலங்கை ஓட்ட வீராங்கனை தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கமும், கலிங்க குமார வெண்கலப் பதக்கமும் பெற்று   கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (20) காலை வந்தடைந்தனர்.  இந்தப் போட்டி ஸ்பெயினில்  "பில்பாவோ"வில் நடைபெற்றது.

 600 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன இந்தப் போட்டியை 01.24.84 நிமிடங்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 ஆசியாவில் இந்த நிகழ்வுக்காக பதிவு செய்யப்பட்ட சிறந்த நேரம் இதுவாகும், இந்த வெற்றியின் மூலம் தருஷி கருணாரத்ன உலக தரவரிசையில் 45வது இடத்தை அடைந்துள்ளார்.

 உலக தரவரிசையில் 48வது இடம் வரையில் தருஷி கருணாரத்னவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் தருஷி கருணாரத்ன ஒலிம்பிக் தகுதி நிலையை சித்தியடைந்துள்ளதாக இலங்கை தடகள நிறுவனத்தின் செயலாளர்  சமன் குமார   தெரிவித்தார்.

 மேலும், இப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட கலிங்க குமார 45.91 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இந்த வெற்றியின் மூலம் கலிங்க குமார உலக தரவரிசையில் 53வது இடத்தை எட்டியுள்ளார்.

 இவ்விரு வீரர்களும் பங்கேற்கும் இரண்டு போட்டிகள் 06/25 தொடக்கம் 06/27 வரையிலும், தேசிய சம்பியன்ஷிப் போட்டி தியகம மைதானத்திலும் மற்றுமொரு விசேட தெரிவுப் போட்டி 06/30 அன்று கொழும்பு சுகததாச மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

 இவ்விரு வீராங்கனைகளும் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர், மேலும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தருஷி கருணாரத்ன உலக தரவரிசையில் 39வது இடத்தைப் பெறுவார், மேலும் கலிங்க குமார நிச்சயமாக ஒலிம்பிக் தகுதி நிலையைத் தாண்டி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஆணையைப் பெறுவார். ஒலிம்பிக் போட்டித் தடகள நிறுவனத்தின் செயலாளர்  சமன் குமார நம்பிக்கை தெரிவித்தார்.

 தருஷி கருணாரத்ன மற்றும் கலிங்க குமார ஆகியோர் துபாயில் இருந்து Emirates Airlines விமானமான EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை   காலை 08.45 மணிக்கு வந்தடைந்ததுடன் அவர்களை வரவேற்க அவர்களது பெற்றோர்கள் மற்றும் மக்கள் குழுவினர் விமான நிலையத்திற்கு வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .