Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாபிரிக்கக் குழாமில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பெயுரன் ஹென்ட்றிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் 15 பேர் கொண்ட தென்னாபிரிக்கக் குழாமில் இடம்பெற்றிருந்த ஹென்ட்றிக்ஸ், கொவிட்-19 தொடர்பான காரணங்களால் குழாமிலிருந்து வாபஸ் பெறப்பட்டிருந்தார்
இந்நிலையில், குழாமிலிருந்த வேகப்பந்துவீச்சாளர் மிகேல் பிறிட்டோறியஸ், தோள்பட்டை காயம் காரணமாக குழாமிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, குழாமில் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா சேர்கப்பட்டுள்ளபோதும், பணிச்சுமை காரணமாக அவர் விளையாடுவது நிச்சயமில்லை எனத் தெரிகிறது.
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago