2025 மே 17, சனிக்கிழமை

தென்னாபிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இடம்பெறவுள்ள உலக கிண்ண பயிற்சி போட்டியில் தென்னாபிரிக்கா - நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து- பங்காளதேஷ் அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் இடையிலான 13-வது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வருகின்ற 5 ஆம் திகதி ஆஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தற்போது பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் இரு நாட்களில் நடந்த பயிற்சி போட்டிகள் கனமழையினால் ​விளையாட முடியாத நிலை ஏற்பட்டது . இன்னொரு போட்டி பாதியில் இரத்து செய்யப்பட்டது. இதில் இந்தியா- இங்கிலாந்து போட்டியும் அடங்குகின்றன.

இந்த நிலையில் இன்று (02) இரு பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. திருவனந்தபுரத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் ஒரு போட்டியும் தென்னாபிரிக்காவும், நியூசிலாந்தும் சந்திக்கின்றன. 

கவுகாத்தியில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் இங்கிலாந்து- பங்காளதேஷ் அணிகள் மோதுகின்றன.

இந்தநிலையில் நாளையுடன் பயிற்சி போட்டிகள் நிறைவடைகின்றன. இந்திய அணி தனது கடைசி பயிற்சி போட்டியில் நாளை நெதர்லாந்தை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .