Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட், போர்ட் எலிஸபெத்தில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் அற்புதமான வெற்றியொன்றை இலங்கை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் வைத்து தமது முதலாவது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இலங்கையணிக்கு காணப்படுகிறது.
முதலாவது போட்டி இடம்பெற்ற டேர்பனை விட இப்போட்டிக்கான ஆடுகளம் மெதுவானதாக இருக்கும் என்றபோதும் வேகப்பந்துவீச்சுக்கே சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையணியைப் பொறுத்தவரையில், முதலாவது போட்டியின் நாயகன் குசல் பெரேராவோடு, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, இளம் வீரர் குசல் மென்டிஸ் ஆகியோர் ஓட்டங்களைப் பெற்றாலே, இலங்கைக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் உருவாகும்.
முதலாவது டெஸ்டில் விளையாடிய அதேயணியே இலங்கை சார்பாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும், கணுக்கால் உபாதைக்குள்ளான குசல் மென்டிஸ், உடற்றகுதிச் சோதனையில் தேறாவிட்டால், அவருக்குப் பதிலாக அஞ்சலோ பெரேரா அறிமுகத்தை மேற்கொள்ளலாம்.
எவ்வாறாயினும், அணியில் குசல் மென்டிஸ் இடம்பெற்றால், இனிவரும் போட்டிகளில் அணியில் தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கு ஆரம்பத் துடுப்பாட்டவீரர் லஹிரு திரிமான்னவுடன் இணைந்து ஓட்டங்களைக் கட்டாயம் பெற்றாக வேண்டும்.
மறுபக்கமாக, முதலாவது டெஸ்டின் இலங்கையின் இரண்டாவது இனிங்ஸில் பின்தொடை தசைநார் உபாதைக்குள்ளான வேர்ணன் பிலாந்தர், இரண்டாவது டெஸ்டை தவறவிடுகின்ற நிலையில், அவருக்குப் பதிலாக அணியில் இளம் சகலதுறை வீரர் வியான் முல்டர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லாவிடின், குயின்டன் டி கொக், ஓட்டங்களைப் பெற ஆரம்பித்துள்ளபோதும், ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் டீன் எல்கர், ஏய்டன் மர்க்ரம் ஆகியோர் ஓட்டங்களைப் பெறத் தடுமாறுகையில், மேலதிக துடுப்பாட்டவீரர் தேவையென தென்னாபிரிக்கா கருதினால், தெனியுஸ் டி ப்ரூன் அணியில் இடம்பெறலாம்.
இதேவேளை, தொடரில் 0-1 என ஏற்கெனவே பின்தங்கியுள்ள தென்னாபிரிக்கா, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான, அணிகளின் தரவரிசையில், தமது இரண்டாமிடத்தைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திலுள்ளது. இப்போட்டியில் தோற்றாலோ அல்லது இப்போட்டி சமநிலை அல்லது வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால், மூன்றாமிடத்துக்கு தரவரிசையில் தென்னாபிரிக்கா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago
2 hours ago