2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 06 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா சார்பாக குயின்டன் டி கொக் 106 (89) ஓட்டங்களைப் பெற்றாலும், அர்ஷ்டீப் சிங், இரவீந்திர ஜடேஜா, பிரசீத் கிருஷ்ணா (4), குல்தீப் யாதவ்விடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 271 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, யஷஸ்வி ஜைஸ்வாலின் ஆட்டமிழக்காத 116 (121), றோஹித் ஷர்மாவின் 75 (73), விராட் கோலியின் ஆட்டமிழக்காத 65 (45) ஓட்டங்களோடு 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. வீழ்த்தப்பட்ட விக்கெட்டை கேஷவ் மஹராஜ் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக ஜைஸ்வாலும், தொடரின் நாயகனாக கோலியும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X